Main Menu

இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்சில் இதுவரை 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவிர, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா வைரசின் தாக்கம் பிரான்சில் அதிகரித்துள்ள நிலையில், பிரெஞ்சு மாவட்டமான Corse தீவில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   இங்கு ஒரு இடத்தில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உட்பட, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றார். கொரோனா தொற்று காரணமாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

Oise மற்றும் Haut-Rhin மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு Corse மாவட்டத்துக்கும் (தீவுக்கும்) விதிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இங்குள்ள அனைத்து பாடசாலைகளும் வரும் மார்ச் 29 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.  

பிரெஞ்சு கூடைப்பந்தாட்ட வீரர் Rudy Gobert கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து, பல பருவகால விளையாட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. 

பகிரவும்...