Main Menu

கொரோனா : ஒரே நாளில் 15 பேர் பலி! – 2,281 பேர் பாதிப்பு

பிரான்சில் தற்போது 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவலை வெளியிட்டார். பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் பலி எண்ணிக்கை 33 இல் இருந்து 48 ஆக அதிகதித்துள்ளது எனவும், தற்போதுவரை 2,281 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  உயிரிழந்த 48 பேரில் 25 பேர் ஆண்கள் எனவும், 23 பேர் பெண்கள் எனவும் தெரிவித்த அவர், 48 பேரில் 33 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார். இந்த கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தது இதுவே முதன்முறை.  தற்போது பிரான்சில் 105 பேர் மிக மோசமான உடல்நலத்துடன் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை, இந்த கொரோனா தொற்றில் பிரான்ஸ் இன்னமும் ‘இரண்டாம் கட்ட’ நிலையிலேயே உள்ளது எனவும் உறுதிப்படுத்தினார். 

பகிரவும்...