Main Menu

இரண்டு முககவசம் அணிவது அவசியமா?- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான்.

கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணியாமல் வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு (சர்ஜிக்கல் மாஸ்க்)களை பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் பலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரி இரட்டை மாஸ்க் அணிவது ஏன்? அவ்வாறு அணிவது அவசியமா? என்று கேட்டபோது நிபுணர்கள் கூறியதாவது:-

மாஸ்க் அணிவது நமது உடலில் இருந்து வைரஸ் வெளியே பரவாமல் இருக்கவும், அதேபோல் வெளியில் இருந்து வைரஸ் நம் மூக்கு வாய் பகுதியில் நுழையாமல் இருக்கவும் தான்.

ஆனால் முககவசம் அணியும் போது சிலருக்கு சரியாக பொருந்தாமல் இருக்கலாம் அதற்காக சிலர் இந்த மாதிரி துணி மாஸ்கையும் அணிந்து இறுக்கமாக்கி கொள்கிறார்கள். சிலர் காது பகுதியில் ஒரு முடிச்சு போட்டு ‘டைட்’ ஆக்கி கொள்கிறார்கள்.

முககவசம் அணிந்து இருக்கும் போது மூக்கின் மேல் பகுதி வழியாக காற்று உள்ளே வருகிறதா? வாயின் அடிப்பகுதியில் தாடை பகுதி வழியாக காற்று உள்ளே வருகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் வழியாக வைரஸ் உள்ளே வர வாய்ப்பு உண்டு.

இந்த முககவசத்துக்கு பதில் என்-95, கே.என்-95 ஆகிய முககவசங்களை அணிந்தால் இறுக்கமாக, பொருத்தமாக இருக்கும் என்றனர்.

பகிரவும்...