இன்று தேசியத் தலைவர் பிரபாகரன் 72வது பிறந்த நாள்
தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று.
வரலாறு தமிழருக்கு தந்த ஒரு மாபெரும் தலைவன் பிரபாகரன். அடி பணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன்.
26.11.1954 அன்று இலங்கையின் வல்வெட்டித்துறையில் பிறந்தார் பிரபாகரன். 1972-ஆம் ஆண்டில் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் தொடங்கினார்.
1975-ம் ஆண்டு காலகட்டங்களில் ஈழத்து தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிக ஈடுபாட்டுடன் இயங்கி வந்தார். அப்பொழுது யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கை ராணுவத்தின் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானார்.
அதன் பின்னர் மே 5, 1976 அன்று ‘புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம்’ என்று இருந்த பெயரானது ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலகத் தமிழர்கள் அவரைத் தங்கள் தமிழ்த் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள். 1991-ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது.
இறுதியாக இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் ராணுவத்தினால் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.
நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.
