ரஷ்ய கூட்டமைப்பின் சட்ட மாஅதிபர் இலங்கை வந்தடைந்தார்
ரஷ்ய கூட்டமைப்பின் சட்ட மாஅதிபர் அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட 21 பேர் கொண்ட தூதுக்குழுவினர், விசேட ரஷ்ய வானூர்தி மூலம் நவம்பர் 25 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர்.
மொஸ்கோவிலிருந்து புறப்பட்ட RSD-306 என்ற ரஷ்ய வானூர்தியில் இரவு 8.47 மணியளவில் இத்தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.
ரஷ்ய தூதுக்குழுவினரின் வருகையை முன்னிட்டு வானூர்தி நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இலங்கை சட்ட மாஅதிபரின் அழைப்பிற்கமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களால் புதுக்கடையில் உள்ள சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நடைபெறவிருந்த சில சந்திப்புக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
