Main Menu

இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பொலிசாரால் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்படடுள்ளனர்.

முஹம்மத் இவ்ஹயும் சாதிக் அப்துல் ஹக், முஹம்மத் இவ்ஹயும் சாஹிக் அப்துல் ஹக் ஆகியோர் இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாத்தளை தொகுதி விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் வீடொன்றைச் சோதனையிட்டுள்ளனர். அங்கிருந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட கடித ஆவணங்களும், பொருட்கள் பலவும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர். இவரது பெயர் ஜெமால்தீன் முஹம்மத் நவாஸ் என்று பொலிசார் தெரிவித்தனர். இவரிடமிருந்து 16 கடவுச் சீட்டுக்களும், போலி அடையாள அட்டைகள் ஏழும், ஐந்து கணக்குப் புத்தகங்களும், நான்கு திருமணச் சான்றிதழ்களும், 44 சிம் கார்ட்களும், வாள் ஒன்றும், 3 யானை வெடிகளும், 23 தோட்டாக்களும், பல்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட 29 இறப்பர் முத்திரைகளும், ஒரு தொகை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 12 பல்கலைக்கழக பட்டப்படிப்பு சான்றிதழ்களும், 11 பல்கலைக்கழக கற்கை நெறி சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக பாடசாலை கிராம உத்தியோகத்தர் அலுவலகம், பரீட்சைத் திணைக்களம், அமைச்சுகளின் கடிதத் தலைப்புக்களும், ஆவணங்கள் பலவும், 153 நபர்களின் புகைப்படங்களும் மீட்கப்பட்டுளள்ன. சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பகிரவும்...