Main Menu

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு டாக்டர்களும், சிறுநீரகவியல் துறை டாக்டர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “நல்லக்கண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் உள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார்.

பகிரவும்...