Main Menu

இந்தியாவில் 500ஐ நெருங்கும் உயிரிழப்பு: 15 ஆயிரம் வரை பாதிப்பு!

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக மரணப்பதிவுகள் 500ஐ நெருங்குகிறது.

இதுவரை, உயிரிழப்பு 480ஆக அதிகரித்துள்ளதுடன் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 ஆயிரத்து 906 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஆயிரத்து 991 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி நிலைவரப்படி வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மகாராஷ்டிர மாநிலத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 194 ஆக நேற்று இருந்த நிலையில் இன்று 201 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து மரண எண்ணிக்கை 69 ஆகவும், குஜராத்தில் நேற்று 3 பேர் மரணித்ததையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலுங்கானாவில் மரண எண்ணிக்கை 18ஆகவும், டெல்லியில் 4 பேர் நேற்று உயிரிழந்தநிலையில் மொத்த எண்ணிக்கை 42 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை தமிழகத்தில் 15 பேரும், ராஜஸ்தானில் 11 பேரும், ஆந்திராவில் தலா 14 பேரும் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 14 பேரும், கர்நாடகா, உத்தரப் பிரதேசத்தில் தலா 13 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியானா, கேரளாவில் தலா 3 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட், பிஹாரில் தலா 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 331 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 72 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டு 283 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் ஆயிரத்து 229 பேரும், தெலுங்கானாவில் 766 பேரும், கேரளாவில் 396 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஆயிரத்து 310 பேரும், கர்நாடகாவில் 359 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஆயிரத்து 99 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 328, மேற்கு வங்கத்தில் 287, பஞ்சாப்பில் 202, ஹரியானாவில் 225, பிஹாரில் 83, அசாமில் 35, உத்தரகாண்ட்டில் 40, ஒடிசாவில் 60, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 36, லடாக்கில் 18 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் 12 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 36 பேர், புதுச்சேரி 7 பேர், மேகலாயாவில் 9 பேர், ஜார்க்கண்டில் 33 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...