Main Menu

இந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்!

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி லக்னோ,  டெல்லி , கொல்கட்டா,  மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

அத்துடன் சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. 260 பேர் பயணிக்க கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில்  சென்னை – தூத்துக்குடி,  சென்னை – மதுரை,  கோவை – ஐதராபாத்,  கோவை – மும்பை இடையே விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்யும் பணிகள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டப்பின் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்  முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் ஆரம்பிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...