Day: May 25, 2020
50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்
உலகமெங்கும் இருந்து 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “உலகளவில் கொரோனா வைரஸ் 51 லட்சத்து 3 ஆயிரத்து 6 பேருக்குமேலும் படிக்க...
பாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நோய்த்தொற்று மரணங்கள் நேற்று சரிபாதியாகக் குறைந்து காணப்பட்டது. கொரோனா பரவியதில் இருந்து அமெரிக்காவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிமேலும் படிக்க...
பிரான்ஸில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று: 20இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கிட்டத்தட்ட 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பிரான்ஸில் 50 இற்கும் மேற்ப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. பாலர் பாடசாலைகளில் பணிபுரியும்மேலும் படிக்க...
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில்மேலும் படிக்க...
இந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்!

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி லக்னோ, டெல்லி , கொல்கட்டா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் சென்னையில் இருந்துமேலும் படிக்க...
போராட்டம் நடத்த வேண்டும் என்றால் எனது தலையை துண்டித்து விடுங்கள் – மம்தா

ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் என மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். ஆம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரங்கள்,மேலும் படிக்க...
யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில்மேலும் படிக்க...
தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களின் காணிகளை அபகரிக்க திட்டம் – தர்மலிங்கம் சுரேஷ்
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரிக்கவே ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமேலும் படிக்க...
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...