Main Menu

இந்தியாவில் நவம்பரில் விற்பனைக்கு வருகின்றது கொரோனா தடுப்பு மருந்து

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று செரும் இன்ஸ்டிடியூட் (Serum Institute) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான AstraZeneca உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டதாக மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி மருந்துகளை விநியோகிப்பதற்கு இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும் இந்த தடுப்பூசி இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் எனவும் செரும் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

பகிரவும்...