Main Menu

இந்தியாவில் ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

இந்தியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக இரண்டு தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ள நிலையில், மேலும் ஆறு நிறுவனங்கள் மருத்துவ  பரிசோதனைகளின் பல்வேறு கட்டத்தில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில வாரங்களில் குறித்த தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  இந்தியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், அதன் பிறகு கொரோனாவிற்கு முந்தைய இயல்பு வாழ்க்கை ஆரம்பமாகும் எனவும்,  சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

பகிரவும்...