Main Menu

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸினால்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2.19 இலட்சம் பேரைத் தொற்றியுள்ளது.

அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேநேரம்; கொரோனா பாதிப்புக்குள்ளான 166 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேர், கேரளத்தில் 25 பேர், உ.பி.,யில் 16 பேர், கர்நாடகத்தில் 14 பேர், டெல்லியில் 11 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் ஒருவர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளார் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...