Main Menu

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ்வா்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொரோனா பெருந்தொற்றை பிரதமர் மோடி மிகச்சரியாக கையாண்டார். ஒட்டுமொத்த நிலைமையையும் உன்னிப்பாகக் கண்காணித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெறுவார்.

ஜனவரி 8ஆம் திகதி முதல் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில சுகாதார அமைச்சர்கள்  நிலைமை குறித்து உரையாற்றி வருகின்றனர். பிரதமருடன் இணைந்து அனைத்து முதலமைச்சர்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயற்படுகின்றனர்.

ஏனைய நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு கொரோனா நிலவரத்தை கண்காணித்துக்கொண்டிக்கிறது. நம்மிடம் மேம்பட்ட திட்டமிடல் உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என அவர் மேலும் கூறினார்.

பகிரவும்...