Main Menu

இந்தியாவிற்குள் ஊடுறுவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை!

இந்தியாவிற்குள் நுழைய காஷ்மீர் எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை அமைப்புகளின் தகவல்படி கரேன் பிரிவுக்கு எதிரே உள்ள ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி பகுதிகளின் ஏவுதளங்களில் 80 பயங்கரவாதிகள் குழு காணப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவம் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் சில நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ளதை இது காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பத்து பயங்கரவாதிகள் அடங்கிய குழு தற்போது நீலம் பள்ளத்தாக்குக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுஜியன் பகுதியில் உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் சுமார் 40 பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.  25 பயங்கரவாதிகள் அடங்கிய குழு தக் கானா பகுதியில் உள்ள ராஜவுரி என்ற இடத்தில் முகாமிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...