Main Menu

இங்கிலாந்தில் முடக்க நிலையை நடைமுறைப் படுத்துவது குறித்து பிரதமர் பரீசிலணை!

இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் பரிசீலித்து வருகிறார்.

பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை, அவர் திங்கட்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்தின் முதல் கொவிட்-19 தொற்றலையை விட தற்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் உள்ளன.

இந்தநிலையில் மேலும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்புகள் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

ஒரு நாளைக்கு உயிரிழப்புகள் 4,000க்கும் அதிகமானதை எட்டக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது. வசந்த காலத்தில் தொற்றுநோயின் உச்சத்தில், இங்கிலாந்தில் இறப்புகள் ஒரு நாளைக்கு 1,000க்கும் அதிகமானதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

பகிரவும்...