Main Menu

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தற்கொலைப் படையினர் போலீஸ் சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 6 பேர் காவல்துறையினர் என்றும், ஒரு குழந்தை உட்பட 5 பொதுமக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.  கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் மட்டும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஜலாலாபாத் பகுதியில் நடைபெற்றன. இதே போல் கடந்த மார்ச் மாதம் விமானநிலையம் அருகே நடைபெற்ற தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...