Main Menu

ஆபிரிக்காவையும் விட்டு வைக்காத கொவிட்- 19: இதுவரை 1,244 பேர் உயிரிழப்பு!

கோரதாண்டம் ஆடிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்- 19) தொற்றுக்கு ஆபிரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 26,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆபிரிக்காவில் புதிதாக 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 47பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்காவை பொறுத்தவரை, அதிகபட்சமாக எகிப்தில் 3,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தென்னாபிரிக்காவில் 3,635 பேருக்கும், மொராக்கோவில் 3,446 பேருக்கும் அல்ஜீரியாவில் 2,910 பேருக்கும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...