Main Menu

ஆந்திரா மர்ம நோய் : பாதிக்கப் பட்டவர்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக தெரிவிப்பு!

ஆந்திர மாநிலம் ஏலுருவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தடயங்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பில் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன் முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ குழுவினர்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...