Main Menu

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டும் பிரான்ஸ் மக்கள்!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே கடும் அச்சம் நிலவுவதால், பிரான்ஸ் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால், பிரான்ஸிலுள்ள தடுப்பூசி மையங்கள் மூடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன.

கடந்த இரு தினங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதியப்பட்டிருந்தவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

ஹாட்ஸ்-டி-பிரான்ஸ் நகரில் மூன்று தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் ஆபத்தில் உள்ளன. இங்கு தடுப்பூசிகள் உள்ளபோதும், போட்டுக்கொள்வதற்கு பதிவுசெய்தவர்கள் வரவில்லை. 1,180 தடுப்பூசிகள் தற்போது இங்கு கைவசம் உள்ளன.

முன்னதாக, பாஸ்-டி-கலாய்ஸ் நகரில் உள்ள காம்பேட்டா தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது.

இங்கு 750 தடுப்பூசி தயாராக உள்ள நிலையில், 200 பேருக்கு மாத்திரமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமானவர்கள் சமூகமளிக்கவில்லை.

இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது.

இதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியுள்ளது.

பகிரவும்...