Main Menu

அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்!

தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதில் 58.7 பல்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள சீனாவின் சோங் சான்சான் உலக அளவில் பதினேழாவது இடத்தையும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்த அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை முந்தியுள்ள சோங் சான்சான், சீனாவின் பெரும்பணக்காரர் என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.

இதனால், ஜக்-மா 56.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் சீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, ஏனைய உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன் ஒப்பிடும்போது சோங் சான்சான் மக்கள் மத்தியில் குறைந்த அளவிலேயே அறிமுகமாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...