Main Menu

அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள  நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்­பெற்று, நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நாளை நடத்­தப்­படும். 

பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஜே.வி.பி.யுடன் பிர­தான எதிர்க்­கட்­சி­யான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஒரு தரப்­பி­னரும் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர்.  ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இணைந்­துள்­ளனர். அத்­துடன் தீர்­மா­ன­மிக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எவ்­வா­றான முடிவை  எடுக்­கப்­போ­கின்­றது என்­பதே  இன்னும் தெளிவு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

கடந்த நான்கு ஆண்­டு­கால அர­சாங்­கத்தின்  பல­வீ­னங்கள் மற்றும் ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் நிலை­மை­களை அடுத்து அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்­தியை காரணம் காட்டி அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­தது. 

இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவாதம் இன்றும் நாளையும் நடை­பெ­று­வ­துடன் நாளை மாலை  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்.  

ஜே.வி.பி., கூட்டு எதிர்க்­கட்சி, ஆகி­யன அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வுள்ள அதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும்  மற்­றைய கட்­சி­களும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

சுதந்­திரக் கட்சி இது­வரை  தமது முடிவு  தொடர்பில் அறி­விக்­க­வில்லை.  எவ்­வா­றா­யினும் அர­சாங்­கத்­திடம் அறுதிப் பெரும்­பான்மை இல்­லா­மை­யினால் இந்த பிரே­ர­ணைக்கு முகம்­கொ­டுப்­பதில் அர­சாங்கம் பெரும் நெருக்­க­டியை சந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது. இதனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவை நேர­டி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்­டுள்ளார். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இன்­னமும் பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா அல்­லது எதிர்ப்­பதா என்ற தீர்­மா­னத்தை எடுக்­க­வில்லை. 

நேற்­றைய தினம் அவர்­களின் பாரா­ளு­மன்ற குழுகூடி ஆராய்ந்த போதிலும் கூட அவர்­களின் இறுதி நிலைப்­பாடு ஒன்று எட்­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் நாளை காலை மீண்டும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூடி இறுதி முடி­வினை எடுக்­க­வுள்­ளது. 

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி  ஐக்­கிய தேசிய முன்­னணி 106 ஆச­னங்­க­ளையும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் -6 ஆச­னங்கள், அகில  இலங்கை மக்கள் காங்­கிரஸ் 5 ஆச­னங்கள், தமிழ் முற்­போக்கு கூட்­டணி – 6 ஆச­னங்கள் அடங்­க­லாக), ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளையும், ஜே.வி.பி. 6 ஆச­னங்­க­ளையும், ஈ.பி.டி.பி. ஒரு ஆச­னத்­தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யிட்டு ஒரு ஆச­னத்­தையும் பெற்­றுக்­கொண்­டன. இவற்றில் ஈ.பி.டி.பி ஐக்­கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் தமது ஆதரவை வழங்கியிருந்தது. இதன்படி ஐக்கிய தேசிய முன்னணி முழுமையாக 107 ஆசனங்களையும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களையும் கொண்டிருந்தது.   

பகிரவும்...