Main Menu

‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோசடி கூற்றுக்களை நிராகரித்து, ‘2020 வெள்ளை மாளிகை வாக்கெடுப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது’ என்று அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எந்தவொரு வாக்களிப்பு முறையும் வாக்குகளை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற்றியது அல்லது எந்த வகையிலும் சமரசம் செய்யப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனக்கான 2.7 மில்லியன் வாக்குகள் நீக்கப்பட்டன என்பதற்கு ஆதாரமின்றி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளிவந்துள்ளது.
முதன்மை கூட்டாட்சி தேர்தல் பாதுகாப்பு அமைப்பின் கீழ் உள்ள ஒரு பொது-தனியார் குடைக் குழுவான தேர்தல் உள்கட்டமைப்பு அரசாங்க ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘எங்கள் தேர்தல்களின் செயல்முறை குறித்து பல ஆதாரமற்ற கூற்றுக்கள் மற்றும் தவறான தகவல்களுக்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தேர்தல்களின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் தேசிய மாநில தேர்தல் இயக்குநர்கள் சங்கம் மற்றும் தேசிய மாநில செயலாளர்கள் சங்கம், மாநில அளவில் தேர்தல்களை நிர்வகிக்கும் அதிகாரிகள், மற்றும் அமெரிக்க தேர்தல் உதவி ஆணையத்தின் தலைவர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்து 8 நாட்கள் கடந்துவிட்டபோதும், தேர்தலில் வெற்றியடைவதற்குத் தேவையான 270 மக்கள் பிரதி வாக்குகளுக்கும் கூடுதலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்றுவிட்டபோதும், ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுக்கிறார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டும் அவர், தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய வெற்றிக் கனியை ஜோ பிடன் தட்டிப் பறித்துவிட்டதாகக் கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் அணியினர் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முறைகேடுகள் பற்றியும் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் ட்ரம்ப் தொடர்ந்து காரசாரமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

பகிரவும்...