Main Menu

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை; ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்தங்கி இரண்டாம் நிலையில் உள்ளார்.

அதன் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு இதுவரையில், 264 இடங்களில் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு 214 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.

பெரிது எதிர்பார்க்கப்பட்ட மாகாணங்களான புளோரிடா, லோவா, டெக்ஸ்சாஸ், ஓஹியோ, உள்ளிட்ட மாகாணங்களை டொனால்ட் ட்ரம்ப் கைப்பற்றியுள்ள போதும் அவருக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அரிஸோனா, மிச்சிக்கன், நியூ ஹம்ஷைர் உள்ளிட்ட மாகாணங்கள் ஜோ பிடன் வசமாகியுள்ளது.

இதேவேளை தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

எதிர்த்தரப்பினர் தேர்தல் வெற்றியினைத் திருடுவதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ருவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்கு ருவிட்டர் நிர்வாகம் தனது கண்டனங்களை வெளியிட்டிருந்தது.

மேலும், தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு முடிவுகளை பெற அவர் நீதிமன்றத்தாய் நாடுவதாக அவர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...