Main Menu

அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை..

மத்திய கிழக்கின் வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்த கப்பல் மீது தம்மால் இலகுவாக தாக்குதல் மேற்கொள்ள முடியும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் இராணுவம் தொடர்பான நாடாளுமன்ற விவகார பிரதிப் பிரதானியான மொஹமட் சலே ஜேகார் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்காக தமது குறுந்தூர ஏவுகணையை பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடைகளை அதிகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால், வளைகுடாவிற்கு போர்க் கப்பல் அனுப்பிவைக்கப்பட்டதை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பிரதிபலன் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியான முரண்பாட்டை தீர்ப்பதற்கு தமக்கு அவசியமுள்ளபோதிலும், அமெரிக்க தரப்பினரின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படா விட்டால் அதில் பயனில்லை என சீனா தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமான சீனாவின் ஹுவாவே நிறுவனத்தை அமெரிக்க கடந்த வாரம் தனது கறுப்புப் பட்டியலில் இணைத்தது.

இதனூடாக அமெரிக்க நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதில் ஹுவாவே நிறுவனத்திற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், வர்த்தக மோதலில் சீனாவை வீழ்த்துவதற்கு அமெரிக்காவினால் இயலாதுள்ளதாக சீன ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்காவினால் நூற்றுக்கு 25 சதவீத வரி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை தற்போது அபாய நிலைமை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...