Main Menu

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 70இலட்சத்து நான்காயிரத்து 768பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் அதிக கொவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 118பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 33ஆயிரத்து 344பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 294பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை அங்கு 25இலட்சத்து 50ஆயிரத்து 510பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 14ஆயிரத்து 20பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை 42இலட்சத்து 50ஆயிரத்து 140பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...