Main Menu

அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை!

அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அந்தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்குத் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட்டுகளால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் இந்தியா, பிரேசில், தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இ-சிகரெட் தொடர்பான நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500இற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இ-சிகரெட்டைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதிலிருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வைத்தியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...