Main Menu

அனைத்து கட்டுப்பாடுகளையும் எளிதாக்குகிறது நியூஸிலாந்து!

சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்திவரும் நியூஸிலாந்து அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு சந்தோஷமான செய்தியொன்றினை அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டினை முதற்கட்டமாக எளிதாக்கத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே நல்ல பலன் கிடைத்தது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில், மார்ச் நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து நாடு பூஜ்ஜிய தொற்றை பலமுறை பதிவு செய்தது.

இந்தநிலையில் நடைமுறையில் மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் எளிதாக்குவதற்கு நியூஸிலாந்து அரசாங்கம், தீர்மானித்துள்ளது.

இதன்படி, உணவகங்கள், கஃபேக்கள், சினிமாக்கள் மற்றும் வணிக வாளகங்களை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கவுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது. அதேபோல உள்நாட்டுப் பயணத்திற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘மே 18ஆம் திகதி முதல் பாடாசாலைகளும் மே 21ஆம் திகதிக்குள் மதுபான சாலைகளும் திறக்கப்படலாம். ஒன்று கூடுவதற்கு 10பேருக்கு மட்டுமே அனுமதி இருக்கும்’ என கூறினார்.

நியூஸிலாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1494பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,371பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21பேர் உயிரிழந்துள்ளனர். 102பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிரவும்...