Main Menu

அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்ய ருவிற்றர் தீர்மானம்

உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் விளம்பரங்களையும் தடை செய்வதற்கு ருவிற்றர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுபோன்ற செய்திகள் விற்பனைக்குரியவையல்ல என ருவிற்றர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணைய விளம்பரம், வணிக விளம்பரதாரர்களுக்கு நம்பமுடியாத சக்திவாய்ந்ததாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும், அந்த சக்தி அரசியலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களைக் கொண்டுவருகிறது என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெக் டோர்ஸி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ருவிற்றர் நிறுவனத்தின் சமூக ஊடக போட்டி  நிறுவனமான பேஸ்புக் சமீபத்தில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிப்பதை நிராகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ருவிற்றர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் கொள்கை சரியானதே எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளையோ அல்லது செய்திகளையோ தனியார் நிறுவனங்கள் தணிக்கை செய்வது சரியானது என்று நான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...