Main Menu

அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை : அமித்ஷா உறுதி!

கா‌‌ஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்‌ஷா உறுதியளித்துள்ளார்.

டெல்லியில்  அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு – கா‌‌ஷ்மீர் அப்னி கட்சி தூதுக்குழுவினரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், “கா‌‌ஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். கா‌‌ஷ்மீருக்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பான குடியேற்ற கொள்கை வகுக்கப்படும்.

கா‌‌ஷ்மீரில் மத்திய சட்டங்களை அமல்படுத்துவதில் பாரபட்சம் இருக்காது. அனைத்து பிரிவினரின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும். அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.

கா‌‌ஷ்மீரின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள்இ தனிநபர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்படும். இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் ஒரு கமி‌‌ஷன் அமைக்கப்படும்.

மக்களின் குறைகளை வாரம் 2 முறை கேட்டறிந்துஇ தீர்வு காண்பதற்காக மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கவர்னரிடம் கூறப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...