Main Menu

அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவர் – பிரியங்கா

நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி ராம்லீலா திடலில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள். நாம் அமைதியாக இருந்து விட்டால் புரட்சிகரமான நமது அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை தொடங்கி விடும் என குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டமூலம்,  காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம்,  வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து ‘இந்தியாவை காப்பாற்றுங்கள்’ என்ற பெயரில் குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற  இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

பகிரவும்...