Main Menu

அதிகாரத்திற்காகவே கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றனர்: உதய கம்மன்பில

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் இனப்பிரச்சினையே இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மேற்குல நாடுகளுக்கும், கூட்டமைப்பினருக்கும் தான் பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வாக பல்வேறு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நிலைப்பாடு குறித்து வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் தேசிய இனப்பிரச்சினை இருப்பதாக கூறுவதே அப்பட்டமான பொய்யாகும். நாடளாவிய ரீதியில் மூவின சமூகத்தினரும் ஒற்றுமையுடனேயே இருக்கின்றார்கள்.

பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டதன் பின்னர் அமையப்பெற்ற மாகாண சபையை உரிய முறையில் பயன்படுத்தி மக்கள் சேவையை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு முன்னெடுத்திருந்தால் இரண்டுவருடங்களாக அம்மாகாண சபை செயலற்றிருக்கையில் மக்கள் வீதிக்கிறங்கி மாகாண சபைகோரி போராடியிருப்பார்கள். அவ்வாறு நடைபெறவில்லை.

அதன்மூலம் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை என்பதே வெளிப்படுகின்றது. கூட்டமைப்பினருக்கே அதிரிகாரப்பகிர்வு அவசியமாகின்றது. அந்தக் கோரிக்கை கூட தமது அரசியலை மேற்கொள்வதற்கே அவர்களால் முன்வைக்கப்படுகின்றது” என கூறினார்.

பகிரவும்...