Main Menu

ஹைகுவி புயல் எதிரொலி – தைவானில் 45 விமானங்கள் ரத்து

தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டைடுங்க் பகுதியில் ஹைகுவி புயல் கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளால் 40 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் கூறுகையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...