Main Menu

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் தொடர்ச்சியாக மூன்று நாளாக உயிரிழப்பு பதிவாகவில்லை!

ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த மூன்று நாட்களாக எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இதன்மூலம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என ஸ்பெயின் பாராட்டப்பட்டு வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றால் 314பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்துடன், கடந்த ஜூன் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளிலும் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.

மேலும், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக 289,360பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 27,136பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்பெயின் ஒவ்வொரு நாளும் 1,000 இற்க்கும் மேற்பட்ட புதிய வைரஸ் தொற்றுகளையும், நூற்றுக்கணக்கான இறப்புகளையும் பதிவு செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பகிரவும்...
0Shares