விமான சேவைகள்- தொடர்ந்து வீழ்ச்சி!
கடந்த பல மாதங்களை போலவே ஏப்ரல் மாதத்திலும் விமான போட்டுவரத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சாள்-து-கோல் விமான நிலையத்திலும், ஓர்லி விமான நிலையத்திலும் சேர்த்து கடந்த ஏப்ரலில் 1.3 மில்லியன் பயணிகள் மாத்திரமே பயணித்துள்ளனர். இவ்விரு விமான நிலையங்களிலும் இரண்டு முனையங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் பிரான்ஸ் கொரோனாவின் பிடியில் இருந்ததால் அம்மாதத்தில் 1.2 மில்லியன் மாத்திரமே பயணித்திருந்தனர். அம்மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவு முன்னேற்றம் தான் என்றபோதும், வழமையாக இயங்கும் இந்த விமான நிலையங்களில் இது 68.4 வீதத்தால் வீழ்ச்சியாகும். அதேவேளை, வருமான இழப்பு எதையும் பரிஸ் விமான சேவை நிறுவனம் (ADP) சந்திக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 474 மில்லியன் யூரோக்கள் வருமானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.