வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களுக்கு கவனம் தேவை – அமெரிக்கா
வளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களைக் கவனமாக இருக்கும்படி அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்திருக்கிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையிலான பதற்றம் அதிகரித்துவரும் வேளையில், அந்த ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் அதனால் விமானத்தின் புவியிடங்காட்டியில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ஆணையம் கூறியது.
தற்போது அந்தப் பகுதிகளில் போர்ரக விமானங்களுடன் அமெரிக்கா விழிப்புநிலையில் இருப்பதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது.