வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கிளிநொச்சியில் தொழிலாளர் தினம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இம்முறை கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
“ஒன்றுபடுவோம் போராடுவோம், உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் முதலாம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஊர்திளின் பேரணி ஆரம்பமாகி டிப்போச் சந்தியில் உள்ள பாண்டியன் பூங்காவைச் சென்றடையும், அங்கு தமிழ்த் தேசிய எழுச்சியுடன் தொழிலாளர் தினக் கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.