Main Menu

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்

அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதேவேளை ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று 21ம்திகதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது