ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் கைது!
ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இவருக்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே அவர் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.