Main Menu

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் – எகிப்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான இருபது ‘Su-35’ ஜெட் விமானங்களை வாங்க எகிப்து ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் ரஷ்யாவுடனான எகிப்தின் ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எகிப்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ரஷ்யாவுடனான எகிப்து மேற்கொண்டுள்ள ஆயுத ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா, எகிப்துக்கு அளிக்கும் பாதுகாப்பு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு உறவைச் சிக்கலாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எகிப்து மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதேவேளை, வடக்கு சிரியாவில் குர்திஷ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கி, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்கியது. இதற்காக துருக்கிக்கு அமெரிக்கா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதுன் ட்ரம்ப் – எர்டோகனின் அண்மைய சந்திப்பிலும் இந்த விடயம் பேசப்பட்டடுள்ளது.