ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சோதனை வெற்றி
ரஷியாவில் மிதக்கும் அணுமின் நிலையத்தில் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தி, வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம் ஒன்று, பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரமாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் முறையாக மின் உற்பத்தி சோதனை நடந்தது. இதில் வெற்றிகரமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.