ரஞ்சன் கோகாயிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – பெண் வழக்கறிஞர்கள்
பாலியல் முறைப்பாடு தொடர்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் முறைப்பாடு தெரிவித்து கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி 22 நீதிபதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை ஓய்வு பெற்ற சிரேஸ்ட நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையகம் அமைத்து விசாரிக்க வேண்டும் என ஏனைய நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பில் விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட சிறப்பு அமர்வு நேற்று (ஏப்ரல் 20) அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப் பாலியல் முறைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்துள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.