ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – ரஜினிகாந்த்
அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்து சட்டசபை தேர்தல் நடந்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்’ என்றார்.
தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மே.23-ல் பதில் தெரிந்துவிடும் என அவர் குறிப்பிட்டார்.