Main Menu

யாழில் படையினருக்காக நிலம் அபகரிக்க முடியாது- கூட்டத்தில் தீர்மானம்

குடாநாட்டில் காணி அளவீட்டுக்காகக் கோரப்பட்டுள்ள இடங்களின் விவரங்கள் ஆராய்ந்து பதிலளிக்கப்படும் வரை, படையினருக்காக எந்த நில அபகரிப்பும் மேற்கொள்ள முடியாது. பொலிஸாருக்கான காணிகள் தொடர்பில் மட்டும் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார், சபை உட்பட அனைவரும் ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வர முடியும் எனத் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா – மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஸா ஆகியோர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.