Main Menu

மே 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு

மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்பிற்கான நீட் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் நாளை முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in அல்லது www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். வரும் மே மாதம் 5ம் தேதி பிற்பகல் 2 முதல் 5 மணி வரை மூன்று மணி நேரத் தேர்வாக நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவுள்ளது.