Main Menu

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது!

கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாலக சில்வாவை கைதுசெய்ய தலங்க பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நுகேகொடயில் உள்ள மெர்வின் சில்வாவின் இல்லத்திற்கு சென்றிருந்தது.

எனினும் இதன்போது மேர்வின் சில்வாவும், அவரது மகன் மாலக சில்வாவும் அந் நேரத்தில் வீட்டில் இல்லாத நிலையில் பொலிஸ் சிறப்புக் குழு சோதனைகளை ஆரம்பித்திருந்தது.

பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே மாலக சில்வாவை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares