முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேநேரம், இன்று நள்ளிரவுக்குள் இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 08ஆம் திகதி சனிக்கிழமையன்று வர்த்தமானி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் ஓகஸ்ட் 09 ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டிய தேசிய பட்டியல்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.
மேலும் பொதுத் தேர்தல்கள் 2020 தொடர்பான அனைத்து வர்த்தமானிகளும் ஓகஸ்ட் 10 திகதி திங்கட்கிழமைக்குள் வர்த்தமானி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று இடம்பெற்ற 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 70 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.