Main Menu

இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகளவில் 1 கோடியே 85 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் நிலையில் உள்ளது.

இன்று காலை நிலைவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரத்து 626 பேர் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 19 இலட்சத்து 63 ஆயிரத்து 239 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு நாடு முழுவதும் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது, 40 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து இதுவரை வீடு திரும்பியோர் எண்ணிக்கை 13 இலட்சத்து 27 ஆயிரத்து 200 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 இலட்சத்து 95 ஆயிரத்து 300 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...