மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன் : பொரிஸ் ஜோன்சன்
பொதுத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்சன்; பிரெக்ஸிற்றை வழங்குவதற்கும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களால் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டுள்ள அவர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அனுமதியைக் கேட்க ராணியைச் சந்தித்தார்.
இங்கிலாந்தின் தென்மேற்குப் பிராந்தியத்தின் கோர்ன்வோலில் உள்ள செயின்ற் ஐவ்ஸ் தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது.
ஐல் ஒஃப் சிலியில் இருந்து கடல் அலையின் சீற்றத்தினால் வாக்குப்பெட்டியை எடுத்துவருவதில் தாமதம் ஏற்பட்டது. அதனாலேயே சென்ற் ஐவ்ஸ் தொகுதியின் தேர்தல் முடிவு தாமதமானது.
இப்போது அறிவிக்கப்பட்ட 650 தொகுதிகளில் கென்சர்வேற்றிவ் கட்சி 365 தொழிற்கட்சி 203, எஸ்.என்.பி 48, லிபரல் ஜனநாயகக் கட்சி 11 மற்றும் டி.யூ.பி 8, சின் ஃபெயின் 7, பிளைட் கம்றி 4, எஸ்.டி.எல்.பி. 1, பசுமைக் கட்சி 1, அலையன்ஸ் கட்சி 1, என வெற்றி பெற்றுள்ளன.
1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் கென்சர்வேற்றிவ் கட்சிக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாக இந்தத் தேர்தல் வெற்றி கருதப்படுகின்றது.
ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிரெக்ஸிற் கட்சி, பொதுத் தேர்தலில் எந்த இடத்தையும் வெல்லத் தவறிவிட்டது.
பகிரவும்...