மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாத்மா காந்தியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பையை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மும்பையில் உள்ள பிரிகான்மும்பை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இவர், மகாத்மா காந்தியை விமர்சித்து டுவிட் செய்திருந்தார்.
அதில் உலகம் முழுவதும் உள்ள காந்தி சிலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட அவருடைய பெயரை அகற்ற வேண்டும் என்றும், இந்திய ரூபாய் நோட்டில் இருந்து அவரது புகைப்படத்தை நீக்க வேண்டும் எனவும், கோட்சேவுக்கு நன்றி எனவும் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதி சவுத்ரியை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவர் மீது கடும் நவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காந்தி குறித்த பதிவை உடனடியாக நீக்கிய நிதி சவுத்ரி, தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பகிரவும்...